செவ்வாய், 9 அக்டோபர், 2012

சேடபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்


                                                  திருபாம்புரம்
கும்பாபிஷேகம்

சேடபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

அருள்மிகு சேடபுரீஸ்வரர்


       அருள்மிகு திருபாம்புரம் வண்டுசேர் குழலி சமேதராகவுள்ள திருபாம்புரநாதர் சேடபுரீஸ்வரர் கோவிலுக்கு சீறும் சிறப்புமாக 11.9.2002 அன்று காலை 9.35 மணியளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கருட பகவான் ஆசியுடன் நாற்புறமும் 108 நாதஸ்சுரம்மும், தவில் முழங்க திருவாடுதுறை, தருமபுரம், திருபனந்தாள் ஆதீனங்கள் மற்றும் சென்னை இராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம் ஸ்ரீபத்மஸ்தானந்தா அவர்கள் தலைமையிலும் முன்னிலைய்யிலும் வெளிநாட்டினர் பலரும் பங்கேற்க, கிராம நகரவசிகள் சூழ்ந்திருக்க நடைபெறும் மகா கும்பாபிஷேகத்தால் திருப்பாம்புரம் கிராமமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
     திருபாம்புரம் சோழநாட்டுச் சிவதலங்களுள் ஒன்றாகும், சிவாலயங்களுள் தேவார திருபதிகங்கள் பாடப்பெற்ற தலங்களே சிறப்புடையவனவாக போற்றப்படுகின்றன. தேவாரம் பாடபெற்ற தலங்கள் 274. அவைகளுள் 59வது திருத்தலமாக திருபாம்புரம்  போற்றப்படுகிறது.  
திரு நடராசசுந்தரம் ஸ்ரீபத்மஸ்தானந்தாஅவர்களுடன்
    இத்தலம் குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்ப்பெரும்பள்ளம் மற்றும் காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம். எனவே இத்தலம் சர்வதோஷ பரிகாரா தலம் என புராணங்கள் கூறுகின்றன. ஈசனின் பஞ்ச முகங்களை குறிக்கும் வகையில் அமையப்பெற்ற பஞ்சலிங்க தலம்.  இவ்வூர் சேடபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கும்பாபிஷேகத்திற்கு நாயகனான சேடபுரீஸ்வரரோ, மந்தகாச புன்னகையுடன் நடைபெறும் மகா கும்பாபிஷகத்தில் இங்கும் அங்கும் ஓடி பலரை நலம் விசாரித்துக் கொண்டும்,சிலரிடம் கட்டளைகள் பிறபித்துக் கொண்டும்,விழாவினைஅலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆதினங்களிடமும், சுவாமி ஸ்ரீ விடமும் ஆலோசனைகள் பெற்றுக் கொண்டும், திருநீறணிந்து வெள்ளை வேட்டி சட்டையுடன் குள்ளமாக காட்சியளிக்கும் அந்த எளிய பழகுவதற்கு இனிமையான மனிதரிடமே நிலைத்திருக்கிறதுதிருபம்புரம் கோயில் சிறப்புகள் பற்றியும் வண்டார் குழலி சமேத சேழபுரீஸ்வரர் மற்றும் அனந்தன் பற்றியும் சர்வ தோஷ பரிகார தலமக விளங்கி வருவது பற்றியும் தெளிவாக கல்வெட்டுகளில் உள்ளவாறு விளக்கிய சரித்திரச் செம்மல் திருமிகு ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நம் நன்றியை தெரிவித்துக்கொண்டு கோயிலின் அமைப்பை தெரிந்து கொண்டு திருபாம்புரம் தெய்வத்திரு.சோ. நடராசசுந்தரத்தின் வெற்றிச் சரித்திரத்தைத் தொடரலாம்.
அருள்மிகு மாமலையாட்டி
      திருபாம்புரம் கோயில் கம்பீரமான மூன்று நிலைகளை உடைய இராசகோபுரத்தை கொண்டுள்ளது.இராசகோபுரத்திற்கு எதிரே ஆதிஷ தீர்த்தம் உள்ளது. உள்ளே கொடி மரத்து விநாயகர் கொடி மரத்தின்கீழ் இரு:ந்தபடி கிழக்கு நோக்கிய வண்ணம் அருள் பாலிக்கிறார். கொடிமரத்தோடு பலிபீடமும் நந்தியெம்பெருமானும் காட்சி தருகின்றனர்.(கொடிமரம் காலப்போக்கில் அழிந்து விட்டது).   இரண்டு பிரகாரங்களை தன்னகத்தே அமையப்பெற்றுள்ளது. கோயிலின் தென்புற வளாகத்தில் திருமலை ஈசுவரர் எனப்படும் மாடக்கோயில் காட்சி தருகிறது.மலை ஈசுவரர் கோயிலில் படிகக்கட்டுகள் உள்ளன. இதில் ஏறி பாம்புரநாதர் கருவறை விமானத்தில் உள்ள சட்டைநதர் சன்னதிக்கு வரலாம்.
    மேற்கு பிரகாரத்தின் கன்னிமூலையில் இராசராச விநாயகரும் இதையடுத்து வள்ளி தெய்வயானையுடன் கூடிய முருகரும் காட்சியளிக்கின்றனர். அம்மன் வண்டுசேர் குழலி கிழக்கு வாயிலை கொண்டுள்ளார்.  அம்மன் மாமலையாட்டி சதுர்புஜத்துடன் தாமரை, உருத்திராக்கா மாலை, அபய, வரத ஹ்ஸ்தங்களுடன் அருள்பாலிக்கிறார். அம்மை மாமலையாட்டியின் (வண்டுசேர் குழலி) சன்னதி இறைவனின் சன்னதிக்கு இடப்புறமாக வடக்கு பிரகாரத்தில் அமை:ந்துள்ளது. 
      கிழக்கில் பைரவர் , சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், இராகுகேது, நாயன்மார் நால்வர்,ஆகியோர் காட்சி தருகின்றனர். பாம்புசேரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் முகமண்டபம் என அமை:ந்துள்ளது. மகாமண்டபத்தில் உற்சவதிருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வயானையுடன் முருகர் போன்றோர் வீற்றிக்கிரார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார்.   இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் இலிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழு:ந்தருளியுள்ளார்.  இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. சேடபுரீஸ்வரர் கோயில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கபட்டுள்ளாள். இராகுவும் கேதுவும் திருக்கோயிலின் ஈசானிய மூலையில் ஏகசரிரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளர்கள்.



              நந்தியபெருமான்

   
 தலவிருட்சம்
 மலையிஸ்வரர்
 
 சட்டநாதர்
சுப்பிரமணியர் வள்ளி தெய்வயானையுடன்
தட்சிணாமூர்தி
 மரத்தில் பாம்பு புற்று





வன்னிஸ்வரர்     வன்னிமரம்












  நாகர் வன்னிமரத்தடியில்
                                                                                                                                                                                                                              புற்றுக்கோயில் 

இராகு-கேது சன்னதி


 
அருள் தரும் நாகவிநாயகர்
அட்டமாநாகங்கள்